மஹிந்த ராஜபக்ஸவால் இதுவரை எதையும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தான் கடந்த 50 நாள்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு- காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சம்பிக்க, “அப்பச்சிக்கும் முடியாது. ராஜபக்ஷவுக்கும் முடியாது என்பதை, கடந்த 50 நாள்களாக நாம் காட்டினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலையில், நாடாளுமன்றத்தில் பலமிக்க அரசாங்கத்தை அமைப்பது அவசியமாகும் என சுட்டிக்காட்டிய அவர் அதேப்போல் தமது இறுதி இலக்கு 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலாகும் எனவும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பது அவசியம் என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.