அரசியலமைப்பு முயற்சியை சமஷ்டி யாப்பு என்று சித்தரித்துள்ள பிவித்துரு ஹெல உறுமயகட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில அதனை நிறைவேற்றிக் கொள்ளும் பெரும்பான்மை அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் முன்பு, நல்லாட்சிக்கு பெரும்பான்மை இருந்ததாகவும் அன்று தம்பக்கம் 54 பேர் மாத்திரம் இருந்ததாகவும் தற்போது 100 பேர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போதைய அரசினால் சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர முடியாது எனவும் தற்போது கூட்டமைப்புடன் தொடர்பு இல்லை என்பதை காண்பிக்க சுதந்திர கூட்டமைப்பில் உள்ள பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முற்படுவதாகவும் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் மகிந்த ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது சமஷ்டி யாப்பை கொண்டு வருவது தடுக்கப்பட்டதாகவும் வரிச்சுமை குறைக்கப்பட்தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.