ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட எந்தவொரு உறுப்பினரும் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய மாட்டார்களென, மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளாரென, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பார்களென்றும் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்களென, பஷில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், கட்சியில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுத் தந்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.