அடுத்த வருடம் கோடைகாலத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகின்றது. 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது
வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அவுஸ்திரேலிய வீரர்கள் மக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.
12-வது ஐபிஎல் தொடர் பகுதியளவு இந்தியாவிலோ அல்லது முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்டிலோ அல்லது தென்னாப்பிரிக்காவிலோ நடக்குமென்று கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது