ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் செயற்கைகோள் மூலமாக குறுஞ்செய்தி பெறும் நேவிக் எனும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த கருவிகள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான, நிகழ்ச்சி நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நேவிக் கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று புளூருத் இணைப்பு வழியாக அன்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட கைபேசிக்கு தகவல் அனுப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசல