179
அஜித் நடிக்கும் 59ஆவது திரைப்படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கின்றார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகின்றார்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கின்றார்.
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ என்ற ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமே இந்த திரைப்படம் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கின்றார். பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகளே கல்யாணி.
‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Spread the love