ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 305 கோடி ரூபா வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.. இது தொடர்பில் சிபிஐ மற்றும் அமுலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் முன்னலையாகுமாறு ப.சிதம்பரத்துக்கு அமுலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அந்தவகையில் டெல்லியில் உள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ப.சிதம்பரம் முன்னிலையாகியுள்ளார். இதன்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்ததாகவும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது