துருக்கியில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. துருக்கி நாட்டின ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி மேற்கொள்ளப்பட்ட போது பொதுமக்கள் உதவியுடன் அதனை எர்டோகன் முறியடித்தார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகமானோhர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் போது 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1934 பேருக்கு அவர்களது ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.