முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தற்பொழுது முன்னாள் பிரதமராகி மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
எதிரணியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மாத்திரமே சுயபுத்தியுடன் இருப்பவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
1 comment
திரு. மகிந்த ராஜபக்ஷ, தான் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிப் பொது ஜனப் பெரமுனவில் இணைந்து அங்கத்தவராகி விட்டதாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். எனினும், அவருக்குப் பெரமுனவில் அங்கத்துவம் வழங்கப்படவில்லை எனப் பாய்ந்து திரு. பசில் ராஜபக்ஷ அறிக்கை விடுவதன் மர்மன்தான் என்ன?
மேலும், பெரமுனவிடம் விலை போய்விட்ட SLFP, திரு. மகிந்த ராஜபக்ஷ இன்னமும் எமது அங்கத்தவராக இருக்கின்றார், எனப் பாய்ந்து சத்தியக் கடதாசி வழங்க முன்வந்ததன் நோக்கமென்ன?
எல்லாமே சந்தர்ப்பவாதம்தான்! இந்தப் பச்சோந்தி வாழ்க்கை இவருக்குத் தேவைதானா? பூனை கூட, ஒரு முறை சூடு பட்டாலே அடுப்பங்கரையை நாடாதாம். திரு. மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த ,’முன்னாள்’, என்ற அடைமொழியில் இவ்வளவு காதலா?