159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வவுனியா தேக்கவத்தை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வீடொன்றினுள் சில இளைஞர்கள் போதை பொருள் பாவிப்பதாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த ஐந்து இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து சில ஹெரோயின் பைக்கெட்டுக்கள் மீட்கபட்டது எனவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , காவல்துறையினர் தெரிவித்தனர்
Spread the love