சமூகவலைத்தள மிகப்பெரிய நிறுவனமான முகப்புத்தக நிறுவனம் பயனாளர்கள் நட்பு வட்டத்துக்காக பகிர்ந்து கொள்ளும் இரகசிய தகவல்களை மைக்ரோசொப்ட், அமேசன் உள்ளிட்ட பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்ட தகவல்பகிர்வுக்கும் அப்பால் சிலபல தகவல்கள் தொழில் நுட்ப நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
மேலும் முகப்புத்தக நிறுவனம் தன் பயனாளர்களின் இரகசிய தகவல்களை வாசிக்க நெட்பிளிக்ஸ், ஸ்னெப்பாட்டிபை ஆகிய நிறுவனங்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அத்துடன் மைக்ரோசாசொப்ட் தேடல் இயந்திரமான பிங் இ முகப்புத்தக பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை தங்கல் தேடல் இயந்திரம் மூலம் அணுக முகப்புத்தக நிறுவனம் அனுமதிக்கிறது. இதே போன்றுதான அமேசனும் பயன்படுத்திக் கொள்ள முகப்புத்தக நிறுவனம் அனுமதிப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே 87 மில்லியன் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுக்கு பகிரப்பட்ட மோசடியில் சிக்கியுள்ள முகப்புத்தக நிறுவனம் சுமார் 150 நிறுவனங்களுக்கு பயனாளர்களின் தகவல்களைப் பெற வசதி செய்து கொடுத்துள்ளதாக நியூயோர்க்; டைம்ஸ் தெரிவித்துள்ளது மேலும் இது குறித்த 270 பக்க அறிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பயனாளர்கள் தகவல்கள் பல நிறுவனங்களுக்குப் பகிரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.