குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளது என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம் மாலை ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளனர்.
அதேவேளை குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளான. நேற்றைய தினம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் காணப்படும் சுவரொட்டிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.
குறித்த சுவரொட்டியில் , தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும் , 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினதும் , பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.
ஆயுத போராட்டமானது , 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளது என குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம் மாலை ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளனர். அதேவேளை குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது ,
தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும் , 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினதும் , பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.
ஆயுத போராட்டமானது , 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.