140
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் எந்தவொரு தேர்தல் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தாலும் புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை என்பதனை உணர வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து மீள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி தேர்தலிற்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love