தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று வெய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு இயந்திரங்களில் மட்டுமே தவறுகள் ஏற்பட்டன. இயந்திரங்களில் தவறுகள் ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இயந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, தவறுகள் ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கணினி போன்று திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.
தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.