மகிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க முடியாது என தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் அறிவித்திருந்தார். இந்த தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் இன்று இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுகின்ற நிலையில், ஐ.ம.சு.கூ. எதிர்க்கட்சியாகவும் கருத முடியாது என அம் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவர் அரச தலைவராக மாத்திரமின்றி அமைச்சரவை அமைச்சராகவும், அவருக்கு கீழ் ஐந்து அமைச்சுப் பதவிகளும் காணப்படுகின்ற நிலையில், ஐ.ம.சு.கூ. எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
00