செக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகாவில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் கிழக்கில் உள்ள கார்வினா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்திலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
சுரங்கத்தின் அடியில் சுமார் 800 மீற்றர்ர் ஆழத்தில் தொழிலாளர்கள் பாறைகளை பிளந்து நிலக்கரியை வெட்டி எடுத்து கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சிக்கி காயமடைந்த 10 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது