எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.
இந்தநிலையில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. தமிழகத்திலுள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் எனது வாக்குச் சாவடி வலுவான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வீடியோ உரையாடல் மூலம் பல கட்டங்களாகப் மோடி உரையாடிவருகிறார். வெற்றிபெறுவதற்கான என்னென்ன உத்திகள் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்திவருகிறார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி எதிர்வரும் ஜனவரி இறுதியில் மோடி தமிழகம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 27ஆம் திகதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்கவுள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் தமிழகம் வரும் நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.