அமெரிக்க படைகள் வெளியேறுவதனால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என அந்நாட்டு ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகின்ற நிலையில் அரச படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் சிரியாவில் முகாமிட்டு தாக்குதலில் ஈடுபட்டு வந்ததனை தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பினர் வசமிருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்
சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே தங்களது நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதனால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது