இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 745 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சுனாமி தாக்கம் – 43பேர் பலி -500க்கும் மேற்பட்டோர் காயம் -சிலர் காணாமல் போயுள்ளனர்
Dec 23, 2018 @ 03:53
இந்தோனேகியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக 43பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுண்டா ஸரெயிற்( Sunda Strait )கடல் பகுதியில் நேற்று இரவு இந்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந் நாட்டின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையம், சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணம் இல்லை எனவும் இதற்கு அனக் கரக்கோற்றோ ( Anak Krakatoa )எரிமலை வெடிப்பின் விளைவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.
குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.