156
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரணையின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகத்தாங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளது.
எதிர்வரும் 2019ம் கல்வியாண்டை முன்னிட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்களினைத் தந்துதவுமாறு பாடசாலை அதிபரினால் வேரூன்றி நிதியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அமைய இப்பொருட்கள் வழங்கி வைக்கபப்ட்டன.
நேற்றைய தினம்(22) ஆறுமுகத்தாங்குளம் அ.த.க.பாடசாலை வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாறுக் ஷிஹான்
Spread the love