165
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதனால், மக்களின் இயல்பு வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டநிலையில் கண்டாவளைப் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் மின்சாரம் தாக்கி நேற்று இரவு இவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெள்ளம் பெருக்கு நிலவிய நேரத்தில் வீடொன்றில் தங்கியிருந்த இவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை இப் பகுதியில் கால்கடைகள் பலவும் வெள்ளப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளன.
Spread the love