குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு பயணித்த அதி சொகுசு பேருந்து நள்ளிரவு புத்தளத்திற்க்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது
-இதன் போது விபத்திற்கு உள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love
Add Comment