அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெற்றிஸை முன்கூட்டியே பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். 68 வயதான ஜேம்ஸ் மெற்றிஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதவிவிலகிய போது ட்ரம்புடனான கொள்கை வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை பதவி வகிக்குமாறு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதிப் பாதுகாப்பு செயலாளராக இருந்த பட்ரிக் ஷான்ஹான் குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிய ஆண்டில் அவர் உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.