தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ள மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான முருகன் என்பவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கிக் காட்டி பாராட்டை பெற்றுள்ளார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அதற்கான செயல்விளக்கத்தை வழங்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன், மதுரை அரசு ஐடிஐ கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வருகிறார்.
சிறிய வயதிலேயே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளாhர். தண்ணீர் மேல் செலுத்தும் துவிச்சக்கர வண்டியையும் இவர் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
‘தண்ணீர் மோட்டார் வண்டி’ குறித்து முருகன் கூறியதாவது:
இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம். 2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன். அதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.