இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான 2-வது டெஸ்ட போட்டி நடைபெற்ற பேர்த் ஆடுகளம் சராசரியான மைதானம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்தமை தொடர்பில் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அந்த மைதானத்தின் தன்மை குறித்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை கருத்து தெரிவிப்பது வழமை.
அந்தவகையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்டையிலான 2-வது டெஸ்ட் நடந்த பேர்த் மைதானம் குறித்து பெரிய அளவில் திருப்தி அடையாத சர்வதேச கிரிக்கெட் பேரவை அந்த மைதானம் சராசரியானது எனத் தெரிவித்திருந்தது.
இதற்கு தனது ருவிட்டர் பக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ள டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், சுவாரஸ்யத்தை உருவாக்கவும் பேர்த் போன்ற மைதானங்கள் தான் தேவையாகும்.
துடுப்பாட்டக்காரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் உண்மையான திறமையை சோதித்து பார்க்கக்கூடிய ஆடுகளமாக அது அமைந்துள்ளதனால் அதனை சராசரி மைதானம் என்று சொல்வது சரி அல்ல என்று பதிவிட்டுள்ளார்