குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சட்டவிரோத மரகடத்தல் , மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு வாகனங்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தனங்களப்பு பகுதியில் இருந்து நுணாவில் பகுதிக்கு நான்கு உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
பொலிசாரை கண்டதும் மணல் கடத்தில் ஈடுபட்ட நபர்கள் உழவு இயந்திரங்களை வீதியில் கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து பொலிசார் குறித்த உழவு இயந்திரங்களை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
தப்பி சென்ற நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் , கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மற்றும் மணல் ஆகியவற்றை நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மற்றும் பாரவூர்தி ஆகியவற்றையும் தாம் கைப்பற்றி யுள்ளதாகவும் , அவற்றையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்தார்.