கடந்த இரண்டு வார காலமாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக தாம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் , தமக்கு எதுவிதமான நிவாரணங்களும் கிடைக்க வில்லை என வடமராட்சி மீனவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , கடந்த பல வாரங்களாக சீரற்ற கால நிலை காணப்படுகின்றது. அதனால் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதனால் கடற்தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. கடற்தொழிலை நம்பியுள்ள எமது பிரதேசத்தில் நூறுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு பகுதி நேர வேலைகளுக்கு சென்றே தமது குடும்பங்களை காப்பற்றி வருகின்றனர். அதனால் பல குடும்பங்கள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை எமக்கு அரச உதவிகளோ , அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோ கிடைக்கபெறவில்லை.
வரட்சி , வெள்ளபெருக்கு என்பவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு நிவாரணங்கள் , உதவிகள் கிடைக்க பெறுகின்றன. ஆனால் மீனவர்கள் பாதிக்கப்படும் போது உதவிகள் நிவாரணங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்துள்ளனர்.