ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியின் மறுசீரமைப்பு செயற்திட்டங்களை எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்து தொகுதி அமைப்பாளர்களினது பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
விரிந்ததோர் அமைப்பு என்ற வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தயாராகும் வகையில் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் தலைமைத்துவத்தை வழங்கி, அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகர் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன, சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.