யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் நோய்த்தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் டெங்கு காச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த்தாக்கம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கா ன வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காவற்துறையினர், முப்படையினர், மற்றும் சகல திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கூட் டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் தொடர்பாக கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , இம்மாதம் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் டெங்கு காச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் பகுதிகளில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பொது இடங்கள் மற்றும் மக்களுடைய வீடுகளுக்கு சென்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதெனவும், அதனடிப்படையில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் சகலரும் இணைந்து சகல இடங்களுக்கும் சென்று
மக்களுடைய ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதெனவும், அதனை தொடர்ந்து யாழ்.மாநகரசபைக்கு வெளியே உள்ள பிரதேச சபைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து யாழ்.மாநகரசபை ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாநகரச பை எல்லைக்குள் டெங்கு நுளம்புகள் பெருகும் 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த இடங்களில் இந்த விசேட செயற்றிட்டம் ஊடாக டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதில் சகலருடைய ஒத்துழைப்பும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.
மேலும் வீட்டு சூழல் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு பொதுவாக சுமத்தப்படுகின்றது. ஆனால் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ளது. எனவே பொது மக்களும், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.