175
தங்காலை குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப்பிரிவு இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
.
Spread the love