சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய இந்திய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பசுவதை தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே இடம்பெற்ற வன்முறை சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் இவ்வாறு தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஜனவரி 15ம் திகதிக்குள் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு திருத்தங்களின்படி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் சட்ட விரோத, பொய்யான தகவல்களை கண்டறிந்து செயலிழக்க செய்ய தொழில்நுட்ப ‘டூல்’களை பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் இத்தகைய தகவல்களை பகிர வேண்டாம் என பயனாளர்களிடம் சமூக வலைத்தளங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள், இந்தியாவில் நிரந்தர அலுவலகத்தை திறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது