132
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6 கிராமும் 106 மில்லி கிராம் கஞ்சா அவரிடமிருந்து மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் காவற்துறையினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தினர். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Spread the love