ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது கடந்த 26.12.2004 அன்று ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாளான இன்று (26) புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் முல்லைத்தீவு பங்கு சுனாமி நினைவாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்பணி அன்ரன்ஜோர்ச் தலைமையில் இன்று (26) புதன்கிழமை காலை 8 மணி முதல் விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெறவுள்ளது காலை மணிக்கு இந்துமத வழிபாட்டினை இந்துமதகுரு அவர்களும் இஸ்லாம் மத வழிபாட்டினை மௌலவி அவர்களும் நிகழ்த்தினர் அதனை தொடர்ந்து கத்தோலிக்க மத வழிபாட்டினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப ஜோ ஜெபரட்னம் அவர்கள் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றது.
நிகழ்வில் அருட்தந்தையர் அருட்சகோதரிகள் அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் சுனாமியில் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.