150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இரணைமடுகுளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளனர். நேற்றைய தினம்(25) மாத்திரம் பல இலட்சங்களுக்கு மீன் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுப்பட்டு வருகின்றனர. அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளனர்.
Spread the love