விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் இன்று 10-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம்திகதி முதல் திருவண்ணாமலையில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டும், வாயில் கறுப்பு துணி கட்டியும், அரை நிர்வாணம் எனவும் பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த 23ம் திகதி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 5 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 3-வது நாளாக இவர்களின் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்ற நிலையில் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதனையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்;. மற்ற 3 பேரும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று 10-வது நாளாகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது