இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு விதித்துள்ளது. பிளிப்கார்ட் , அமேசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுக்கே இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இணையம் மூலம் விற்கப்படும் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இணைய வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கும் சில உற்பத்தி பொருட்களை இயைத்தில் மட்டுமே விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 1ம்திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது