நாட்டில் எந்தவொரு அரசமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அரசமைப்பின் 9 ஆவது உறுப்புரிமைக்கு இணங்க, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மாத்திரம் மாற்றப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். மேலும், எந்தவொரு அரசமைப்புத் திருத்தத்தின்போது பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மாத்திரம் மாற்றப்போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறுவதாகவும் இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதி காவற்துறைமா அதிபருக்கு பணித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இந்து ஆலயமொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறாக மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக தண்டனை கடுமையாக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படாத வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்iபை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டும் என்றும் பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.