ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம், மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிரல் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் இணைப்பதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சையை தீர்க்க முடியுமா என? இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை ஏற்கனவே முற்றுபெற்றுவிட்டதாகவும். அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.