169
கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசித்து வரும் சி. அன்பழகன் என்ற 11 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 6ல் கல்வி கற்ற மாணவனாவார்.
கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த நிலையில், நேற்றைய தினத்திலிருந்து மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். இந் நிலையில் இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love