குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் துரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய போது அங்கிருந்து நல்லூர் , முடாமவடி , கோப்பாய் பகுதிகளில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்திய நிலையில் காரினை இணுவில் புகையிரத நிலைய பகுதியில் நிறுத்தி விட்டு அதன் சாரதி தப்பிசென்றுள்ளார்.
குறித்த விபத்துக்களில் குடும்ப பெண்ணொருவர் , சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரினை மீட்டு சென்றுள்ளதுடன் சாரதியை தேடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.