இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிராமியக் கலைகளின் சங்கமம் கலை நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலைவிழாவின் பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவருமான கலாநிதி க.சிதம்பரநாதன் கலந்து கொண்டார்.
காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை அமர்வில் கலாநிதி க.சிதம்பரநாதனின் நெறிப்படுத்தலில் பாரம்பரியக் கலைச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்மாவட்டம் மற்றும் தீவகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியதுடன் பாரம்பரியக் கலை வடிவங்கள் குறித்தும் அவற்றை நிகழ்துவதற்கான காரணங்கள் நிகழ்த்துகை இளைஞர்களின் பங்களிப்பும் எதிர்காலமும் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பும் படங்களும் யாழ்.தர்மினி பத்மநாதன்