ஏமனின் மிக முக்கியமான ஹூடேடா துறைமுக நகரத்திலிருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத் தரப்புக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமடைமிடையில் சுவீடனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே, இவர்கள் இவ்வாறு வெளியேற ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
கடந்த 29ம்திகதி சனிக்கிழமை அதிகாலை முதல், அவர்கள் வெளியேற ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகளின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஏமனில் பட்டினியை எதிர்கொள்ளும் சுமார் 14 மில்லியன் மக்களுக்குத் தேவையான உணவை விநியோகிப்பதற்குத் தேவையான முக்கியமான பாதையாக காணப்படும் இந்தத் துறைமுகத்தினைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற மோதல்களின் பொது அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்பட்டிருந்ததனைத் தொடர்ந்தே, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், துறைமுகத்திலிருந்து வெளியேறுவது, பல கட்டங்களாக நடைபெறுமெனவும், அதன் முதலாவது கட்டமே இப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது எனவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.