160
இலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இதன்படி ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச் டி சில்வா 2019 ஜனவரி 01ஆம் திகதி முதல் புதிய கடற்படைத் தளபதியாக தனது பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Spread the love