சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பெண்கள் சுவர் எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.
ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நடிகை சுகாசினி, அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது