238
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெறுகின்றது. சென்னை, கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பலஸில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது.
தமிழகத்தில் இன்று இரவு இடம்பெறும் புத்தக விழாவில் வெளியிடப்படும் இந்த நாவல் 2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இயக்குனர் கவிதா பாரதி தலைமையில் நடைபெறும் சிறப்பு வருகையாளராக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கலந்து கொள்கிறார்.
இதேவேளை இந்த நிகழ்வில், இயக்குனர் மீரா கதிரவன், தமிழக கவிஞர் மண்குதிரை, ஊடவியலாளர் செல்வ புவியரசன், எழுத்தாளர்களான இளங்கோவன் முத்தையா, அகரமுதல்வன் ஆகியோரும் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
Spread the love