அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியரான லேரி நாசர்(Larry Nassar ) க்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியராக செயற்பட்டு வந்த 54 வயதான லேரி நாகர் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளநிலையில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் இவர் மீது பாலியல் முறைப்பாடு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் லேரி நாசருக்கு 175 வருடம், சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இவர் மீது குழந்தைகள் தொடர்பான ஆபாச கிராபிக்ஸ் வீடியோக்கள் வைத்திருந்த வழக்கு தொடர்பாக 60 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியருக்கு குழந்தை ஆபாச வழக்கில் 60 வருட சிறைத்தண்டனை
Dec 8, 2017 @ 13:56
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியரான லேரி நாசர்(Larry Nassar ) க்கு ஆபாசம் படம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் 60 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியராக செயற்பட்டு வந்த 54 வயதான லேரி நாகர் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளநிலையில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவரது கணிணியின் ஹார்ட் டிஸ்க் ஆராயப்பட்டதில் குழந்தைகள் தொடர்பான 37 ஆயிரம் ஆபாச கிராபிக்ஸ் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற விசாரணையில் தனது மீதான குற்றச்சாட்டை லேரி நாசர் ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவரும் இவர்மீது பாலியல் புகார் வழங்கியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.