தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் ஆரம்பமாகியது. பன்வாரிலால் தன் உரையில், “முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நலப்பணிகள் அனைத்தும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை எனவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நினைவிடமாகிறது வேதா இல்லம்….
30, 2017 @ 03:55
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்காக, அரசுடைமையாக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக வீட்டை அளவிடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேதா இல்லத்திற்கு தீபா, தீபக் உரிமை கோருவதால் பெறுமதியை கணக்கிட்டு அதற்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேதா இல்லம் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் மற்றும் அவரது சகோதரி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதற்கு யார் உரிமையுள்ளவர்கள் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் வழக்கு:-
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது