ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ள நிலையில், கலவரத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை மஷாத் என்ற இடத்தில் ஆரம்பமான போராட்டங்கள் பல நகரங்களுக்கு பரவியுள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தால் 2 பேர் ஏற்கனவே பலியான நிலையில், நேற்றிரவு மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி; ரவுஹானி விடுத்த எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து வன்முறை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
ஈரானில் சில நகரங்களில் இடம்பெற்றுவரும் வரும் போராட்டங்களில் இருவர் பலி்…
Dec 31, 2017 @ 05:59
ஈரானில் சில நகரங்களில் இடம்பெற்றுவரும் வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறிவருகின்ற நிலையில் இந்தக் கலவரத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை மஷாத் என்ற இடத்தில் ஆரம்பமான போராட்டங்கள் பல நகரங்களுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதக் கூட்டங்களை தவிர்க்குமாறு ஈரான் உள்துறை அமைச்சர் விடுத்த எச்சரிக்கையினையும் மீறி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களின் போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைப்பதும், அரசு அலுவலகங்களை தாக்குவதும் தொடர்சதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.