இலங்கை பிரதான செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் – ஜே.வி.பி.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது ஜனாதிபதி தண்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மோசடி குறித்த விபரங்களை ஜனாதிபதி மட்டும் அறிந்து கொள்வதில் எவ்வித பயனும் கிடையாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.