புத்தாண்டு தினத்தை முன்ன?ட்டு உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்தமையினால் சமூக வலைதள ஊடகமான வட்ஸ் அப் சிறிது நேரம் முடங்கியது. கோடிக்கணக்கான மக்களுக்கு குறுஞ்செய்தி தகவல்களை அனுப்ப பயன்படும் சமூக வலைதளமான வட்ஸ் அப் சுமார் அரை மணி நேரம் வரை முடங்கியது.
இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், பனாமா, தென் ஆப்பிரிக்கா, கத்தார், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வட்ஸ் அப் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து வட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியிடவில்லை என்கின்ற போதிலும் சேவர் செயலிழந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.